ஷாப்பிங் மாலில் விஜய்யின் Cool வாக்... வைரலாகும் வீடியோ

படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றிருக்கும் நடிகர் விஜய், அங்குள்ள ஷாப்பிங் மாலில் பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் கூலாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

ஷாப்பிங் மாலில்  விஜய்யின் Cool வாக்... வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்,அடுத்ததாக நடித்து வரும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.

ஹிட் பாடல்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்த பிரபல இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் ஜார்ஜியா மற்றும் சென்னையில்  நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்டமாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் டெல்லி செல்ல விமான நிலையத்திற்குள் நுழையும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ஷூட்டிங்காக டெல்லி சென்ற விஜய், அங்குள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அமைதியாக நடிகர் விஜய் வலம் வரும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.