நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா? என கேட்ட ரசிகர்...ஒப்பனாக பதிலளித்த யாஷிகா...!

நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா? என கேட்ட ரசிகர்...ஒப்பனாக பதிலளித்த யாஷிகா...!

தமிழில் ’கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனைத்தொடர்ந்து துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்பட பல படங்களில் நடித்து வந்தார் யாஷிகா. அந்த நேரத்தில்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த யாஷிகா மக்களிடையே பிரபலமானார். ஆனால் அதற்கு பிறகு சரியாக எந்த பட வாய்ப்பும் அமையவில்லை.

அதற்கேற்றாற்போல் சமீபத்தில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா, நான்கு மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். பின் அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தொடர்ந்து போட்டோஷூட்களை ஆரம்பித்து அவ்வப்போது புகைப்படங்களை சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் யாஷிகா இன்ஸ்டாவில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஓப்பனாக பதிலளித்து வந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர்  நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், இல்லை நான் யாஷிகா என அதிரடியாக பதிலளித்துள்ளார். தற்போது இவர் கூறியது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.