’என் குட்டிகளை காப்பாத்துங்க ‘ என ஏக்கத்துடன் பார்த்த நாய்.. 3 மணி நேரம் தொடர்ந்த பாசப்போராட்டம்.. !

’என் குட்டிகளை காப்பாத்துங்க ‘ என ஏக்கத்துடன் பார்த்த நாய்..   3 மணி நேரம் தொடர்ந்த பாசப்போராட்டம்.. !

வந்தவாசியில் நாய் ஒன்று தன் குட்டிகளை வாயில் வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து,  தன் குட்டிகளை காப்பாற்றுமாறு மனிதர்களிடம் கோரிக்கை வைத்து நடத்திய பாசப்போராட்டம்  மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நாய் ஒன்று கடந்த வாரம் 6 குட்டிகளை ஈன்றெடுத்தது. இதையடுத்து வந்தவாசி பஜார் வீதியில் குளிர்பானக் கடைக்கு பின்னால் அந்த குட்டிகளை பாதுகாத்து வந்தது அந்த நாய். 

ஆனால் கடந்த 2 நாட்களாக வந்தவாசியில் மழை பெய்து வந்ததால் தன் குட்டிகளை எங்கு வைப்பது என அறியாமல் திகைத்தது. 

இந்த நிலையில் தனது குட்டியை வாயில் எடுத்துக் கொண்டு வந்தவாசி பஜார் வீதிகளில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருந்தது. 

இதனை வேடிக்கை பார்த்த ஒருவர், நாயின் பரிதவிப்பை புரிந்து கொண்டார். அதே நேரம் அந்த தாய் நாயும், வாலாட்டியவாறே நின்று குட்டிகளை காப்பாற்றுமாறு ஏக்கத்துடன் பார்த்தது. 

நாயின் பரிதவிப்பை புரிந்து கொண்டவர், குட்டியை மீட்டு தனியார் திருமண மண்டப வாசலில் வைத்தார். ஆனால் அப்போதும் விடாத நாய், ஓடிச் சென்று ஒவ்வொரு நாயையும் வாயில் வைத்து தூக்கி வந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டது. 

இதைத் தொடர்ந்து நாயின் இருப்பிடத்துக்கு சென்று பார்த்ததில் மொத்தம் 6 குட்டிகளை ஈன்றது அறியப்பட்டது. பின்னர் அத்தனை குட்டிகளையும் மீட்டவர்கள் அதற்கு உணவளித்தனர். 

தம் குட்டிகளை காப்பாற்றுவதற்கு 3 மணி நேரமாக அங்குமிங்கும் அலைந்து திரிந்த இந்த நாயின் பாசப் போராட்டம் பொதுமக்கள் கண்களில் நீரை வரவழைத்தது. 

இதையும் படிக்க   | "2024 தேர்தல்: திராவிட மாடலா? தேசிய மாடலா? என்பதற்கான தோ்தல் " அண்ணாமலை பேச்சு!!