விரைவில் முக்கிய அறிவிப்பு..! காத்திருங்கள்..!! காஜல் அகர்வால்

விரைவில் முக்கிய அறிவிப்பு..! காத்திருங்கள்..!! காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். 

கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியாகி வந்தது. 

தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடிக்க ஒப்பந்தமான 'தி கோஸ்ட்' என்ற படத்திலிருந்து காஜல் விலகினார். கர்ப்பமானதுதான் அதற்குக் காரணம் என்று சில தகவல்கள் உலா வந்தது.

இந்நிலையில், “விரைவில் முக்கிய அறிவிப்பு, காத்திருங்கள்” என காஜல் அகர்வால் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதைப் பற்றித்தான் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் எனத் தெரிகிறது.