ரசிகர்களிடம் மன்னிப்பு கோராத நடிகர் ஷாரூக்கானை மறைமுகமாக வசைப்பாடிய நடிகை கங்கனா ரனாவத்...

போதைப்பொருள் வழக்கில் மகன் கைது செய்யபட்டதற்கு, ரசிகர்களிடம் மன்னிப்பு கோராத நடிகர் ஷாரூக்கானை, நடிகை கங்கனா ரனாவத் மறைமுகமாக வசைப்பாடியுள்ளார்.

ரசிகர்களிடம் மன்னிப்பு கோராத நடிகர் ஷாரூக்கானை  மறைமுகமாக வசைப்பாடிய நடிகை கங்கனா ரனாவத்...

 நடிகர், தற்காப்புக் கலை நிபுணர், தயாரிப்பாளர், இயக்குநர் என் பன்முகத்தன்மை கொண்டவர் ஜாக்கி சான். இவரது மகன் கடந்த 2014ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியபோது,  ஜாக்கி சான் அவருக்கு உதவ முன்வரவில்லை. மேலும் தனது மகனின் வெட்கக்கேடான செயலுக்கு, ரசிகர்களிடம்  மன்னிப்பும் கோரியிருந்தார்.

இந்தநிலையில் ஜாக்கி ஜான் மகனை கைது செய்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா, ஜாக்கிசான் மகன் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்ததாக குறிப்பிட்டார். ஆனால் ஷாரூக்கான் தனது மகனை ஜாமினில் எடுப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக  மறைமுகமாக தாக்கியிருந்தார்.