பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அரபிக் குத்து பாடலை அனிருத்துடன் பாடிய அந்த "செல்லமா" யார் தெரியுமா??

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலை அனிருத்துடன் பாடியது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..  அரபிக் குத்து பாடலை  அனிருத்துடன் பாடிய அந்த "செல்லமா" யார் தெரியுமா??

சமீபத்தில், நெல்சன், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் மூவரும் இணைந்து அரபிக் குத்து பாடலின் அறிமுக ப்ரோமோவை வெளியிட்டனர். இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் புரமோ பல மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், அரபிக் குத்து பாடலை விஜய் பாடவில்லை.. அனிருத் தான் பாடி உள்ளார். அவருடன் இணைந்து பாடியிருக்கும் பெண் குரலுக்கு சொந்தமான ஆள் யார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடல் காதலர் தின கொண்டாட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிறது. பீஸ்ட் படத்திற்காக வேற லெவலான பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் விஜய் இப்பாடலை பாடினால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், விஜய் இப்பாடலை பாடவில்லை.. நெல்சன் தான் இப்பாடலை பாடியுள்ளார். அனிருத்துடன் இணைந்து பாடிய பாடகி யார் எனபது குறித்து கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

அந்த வகையில், டாக்டர் படத்தில் 'செல்லமா' பாடலை பாடிய ஜோனிடா காந்தி தான் அனிருத்துடன் இணைந்து பீஸ்ட் படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலை பாடி இருக்கிறார்.