மாஸ்சாக வெளியான அண்ணாத்த போஸ்டர்.. திருவிழா கூட்டத்துல கெத்து காட்டும் ரஜினி

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

மாஸ்சாக வெளியான அண்ணாத்த போஸ்டர்.. திருவிழா கூட்டத்துல கெத்து காட்டும் ரஜினி

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த அப்டேட் இல்லாமல் காத்துக்கொண்டிருந்த ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. 

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. சிவா மற்றும் ரஜினி  கூட்டணியில் நவம்பர் 4ம் தேதி தீபாவளிக்கு இந்த படம் வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.