மீரா மிதுனை கைது செய்தது சரி..! நடிகை ட்விட்டரில் பாராட்டு..!

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன மீரா?

மீரா மிதுனை கைது செய்தது சரி..! நடிகை ட்விட்டரில் பாராட்டு..!

தன்னை சூப்பர் மாடல் என உளறி வந்த சுமாரான மாடல் மீரா மிதுன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக உள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய ஜோடி மீதே பாலியல் புகார் கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நடிகை மீரா மிதுன். 

தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி போச்சு உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். மாடலாகவும் இருந்து வந்தவர், தனியார் தொலைக்காட்சியில் நடந்த ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார். அங்கும் அவர் தனது சக போட்டியாளரான இயக்குநரும், நடிகருமான சேரன் மீது பாலியல் புகார் அளித்தார். போட்டியிலிருந்து வெளியே வந்தவர், நடிகர் விஜய், சூர்யா, அஜித் மற்றும் அவர்களது மனைவிகள் மீது அவதூறான கருத்தை யூடியூப் மூலம் பரப்பி வந்தார். 

அப்போதே பல எதிர்ப்புகள் அவர் மீது குவியத் தொடங்கின. தமிழ்நாடு முழுவதும் காவல்நிலையங்களில் அவர் மீது புகார்கள் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ஐதராபாத் சென்று பதுங்கி மீரா மிதுன் தனது புதிய நண்பரான அபிஷேக் ஷியாம் என்பவருடன் இணைந்து சினிமா துறையில் இருப்பவர்களை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார். அதன் ஒரு உச்சமாக சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் கீழ்தரமாக பேசி வீடியோ வெளியிட்ட மீரா  மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

தன்னை யாராலும் கைது செய்ய முடியாது, கனவில் மட்டும் தான் அது முடியும் என தெனாவட்டாக பேசி கேரளா மாநிலம் ஆழப்புலாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஷியாம் ஆகியோரை குண்டு கட்டாக தூக்கினர் அதிகாரிகள். காவல்துறையினர் அவரை கைது செய்ய சென்ற போது கூட, யூடியூபில் கதறி அழுது, தன்னை யாராது தொட்டால் தன்னைத் தானே கத்தியால் கொலை செய்து இறந்து விடுவேன் என பிதற்றிக் கொண்டிருந்த மீராவை, கைது செய்து சென்னை அழைத்து வந்தனர் காவல்துறையினர். 

சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட மீரா மிதுன், காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், 24 மணி நேரமாக தனக்கு உணவு வாங்கித் தரவில்லை, தனது கையை உடைத்து விட்டார்கள் எனவும் புலம்பிக் கொண்டே சென்றார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால், ஜாமீன் கிடைக்க கூட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மீராவை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

அந்த வகையில், மீரா மிதுன் கலந்து கொண்ட அதே தனியார் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட சனம் ஷெட்டியும், மீராவின் கைதுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசாரை நினைத்து பெருமைப் படுவதாகவும், சில ஆண்டுகளாக சகித்துக் கொண்டிருந்த அத்தனை கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும்’’ குறிப்பிட்டுள்ளார்.