ஜெய்பீம் குழுவின் "சத்யதேவ் அகாடமி".. பாராட்டுக்கள் தெரிவித்த முதலமைச்சர்!

ஜெய்பீம் குழுவின் "சத்யதேவ் அகாடமி".. பாராட்டுக்கள் தெரிவித்த முதலமைச்சர்!

ஏழை எளிய மக்களின் கல்விக்காக தொடர்ந்து அக்கறையோடு செயல்பட்டு வருவதாக நடிகர் சூர்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு முன்னெடுப்பில், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் உருவாக்கியுள்ள சத்யதேவ் அகாடமியை தொடங்கி வைத்தார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்," அதிக அளவில் சட்ட கல்லூரிகள் வந்த பிறகும், எளிய குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு, சட்ட படிப்பு ஒரு சவாலாகவே உள்ளது. எனவே, அதை கருத்தில் கொண்டு, சத்திய தேவ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்த அகாடமியில் சட்ட நிபுணர்கள்/சட்ட ஆசிரியர்களைக் கொண்டு சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பாடங்களைக் காணொலியில் பதிவு செய்யப்பட்டு "யூ-டியூப்" வலைதளத்தில் பதிவேற்றப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், நடிகர் சூர்யா "ஜெய்பீம்" புத்தகத்தை முதலமைச்சருக்கு பரிசளித்தார். இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள முதலமைச்சர், "ஜெய்பீம் படத்துக்கு பிறகும் நீதியரசர் சந்துருவுடன் சமூக அக்கறையோடு செயல்பட்டு வரும் நடிகர் சூர்யா, ஞானவேலுக்கு பாராட்டுக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || கோவை ஹேப்பி ஸ்ட்ரீட்டில், ஆடல் பாடலுடன் இளைஞர்கள் உற்சாகம்!!