செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் அவா் ஜாமீன் கோாி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அங்கும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவா் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.