எம்பிபிஎஸ், பி டி எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

எம்பிபிஎஸ், பி டி எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

எம்பிபிஎஸ், பி டி எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மேலும் 2 நாள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ், பி டி எஸ், இடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் இன்று மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 21 ஆயரத்து 560 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9,400 பேர் என்ன மொத்தம் 31 ஆயிரம் மாணவ மாணவிகள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இன்று மாலை 5 மணி உடன் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக இருந்த நிலையில், மேலும் இரண்டு நாள் நீடிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டு இன்னும் சில தினங்களில் கலந்தாய்வு தொடங்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க   | "அண்ணாமலையை விட ஆளுநர் அதிகம் அரசியல் பேசுவதால், யார் தலைவர் என்பதில் குழப்பம்", சீமான் விமர்சனம்!!