டியூப் வைத்து சடலத்தை சுமந்து சென்ற அவலம்... வெள்ளப்பெருக்கால் அவதி படும் பொது மக்கள்...

சங்கோணம்பட்டியில் இறந்தவரின் உடலை மூல வைகை ஆற்றில் ஆபத்தான முறையில் நீந்தி சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

டியூப் வைத்து சடலத்தை சுமந்து சென்ற அவலம்... வெள்ளப்பெருக்கால் அவதி படும் பொது மக்கள்...

தேனி | கொடுவார்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்டது சங்கோணம்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக மூல வைகை ஆற்றை கடந்து சென்று இறந்தவர்களின் உடலை மயானத்தில் அடக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கதுமழைக்காலங்களில் மூல வைகை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும்.

இந்நிலையில், நேற்று சங்கோணம்பட்டியில் உயிர் இழந்த 55 வயது ராமர் என்பவரின் உடலை லாரி டயரின் டியூபை பயன்படுத்தி மிதவைப் போன்று தயாரித்து அதில் உடலை வைத்து ஆல் முழ்கும் அளவிற்கு உள்ள தண்ணீரில்  நீந்தியபடி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து உடலை அடக்கம் செய்தனர்.

நீண்ட காலமாக தங்கள் கிராம மக்கள் படும் சிரமத்தை தற்போது ராமரின் உடல் அடக்கம் செய்த பதிவினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வைரலாக்கி இப்பகுதியில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாலம் அமைத்து தர கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | மாண்டஸ் புயல் எதிரொலியாய் வீடுகளுக்குள் மழை நீர் கடும் அவதி .....