தேங்காயை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய கொ.ம.தே.க கோரிக்கை!

தீவனம், இடு பொருள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

தேங்காயை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய கொ.ம.தே.க கோரிக்கை!

கோவை தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலை உள்ள தீரன் அரங்கத்தில் நடைபெற்றது.

பாமாயில் இறக்குமதி தடை செய்ய வேண்டும்

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும். நம் நாட்டிலேயே தேங்காய் உற்பத்தி அதிக அளவில் இருக்கும் பொழுது கடந்த ஆண்டு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் தேங்காய் எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதை  முற்றிலுமாக தடுக்க வேண்டும்.தென்னை சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் கூட ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்து பல பொருட்கள் இந்தியாவிற்கு வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தென்னை பொருட்களுக்கு உதவ கோரிக்கை

கோவை மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் கொள்முதல் விலையை 2019 ஆம் ஆண்டு அரசு உயர்த்தியது. அதற்குப் பிறகு தீவனம், இடு பொருள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பால் உற்பத்தி தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே லிட்டருக்கு 40 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். நுகர்வோர்களை பாதிக்காமல் மானிய விலையில் அரசு விநியோகம் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலையாக கிலோவிற்கு ரூபாய் 150க்கு கொள்முதல் செய்ய வேண்டும். உரித்த தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் தென்னை மரங்களில் தாக்கியுள்ள வெள்ளை ஈக்கள் தாக்கல் ,கேரளா வாடல் நோய் தாக்குதல்களை கட்டுப்டுத்த மருந்து கண்டுபிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.