மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர் ஆய்வு!

மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர் ஆய்வு!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது.ஏற்கனவே பழைய கட்டிடமாக இருந்த நிலையில் புதிதாக கட்டிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

அடிப்படை வசதிகள்

இந்த நிலையில் இந்த மாணவர் விடுதியில் 82 மாணவர்கள் தங்கும் வசதி உள்ளது.தற்போது 48 மாணவர்கள் தங்கி உள்ளதாகும் அங்குள்ள தகவல் பலகையில் கணக்கிடப்பட்டுள்ளது.  இந்த மாணவர் விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் தற்போது ஒரு மாணவர்கள் கூட விடுதியில் தங்கி படிக்காத நிலை  உள்ளது. 

கழிவறையில் தண்ணீர் வசதி இல்லை

அது மட்டும் இல்லாமல் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் மட்டுமே வந்து உணவு சாப்பிட்டு விட்டு செல்வதாகவும் மேலும் தண்ணீர் வசதி இல்லாததால் உணவருந்தும் தட்டுகள் கழுவப்படாமல் உள்ளது. இதன் காரணமாக சாப்பிட வரும்  மாணவர்கள்  தாங்களே தட்டு கொண்டு வந்து ஒரே தட்டில் இரண்டு மாணவர்கள் சாப்பிடும் நிலை உள்ளது.

மேலும்  கழிவறைக்கு தண்ணீர்  வசதி இல்லாமல் மிகவும் மோசமான, சுகாதாரமற்ற முறையில் உள்ளது.அது மட்டுமல்லா விடுதி காப்பாளர் ஆஷா விடுதிக்கு வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

மாணவர்கள் கோரிக்கை

யாருமே தங்காத மாணவர்கள் விடுதிக்கு வரும் நிதி யாருக்கு செல்கிறது என்று கேள்வி எழுந்தது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கு வேண்டும் எனவும் இங்கு தங்கி தற்போது வெளியேறியுள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ( பொறுப்பு) சிவக்குமார், தனி வட்டாட்சியர் முத்துமாரி, இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியேர் மாணவர் விடுதியில் தண்ணீர் வசதி இல்லாதது குறித்தும்,உணவின் தரம் குறித்தும்,பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். உடனே பழுதடைந்த நிலத்தடி நீர் குழாய் சரிசெய்யும் பணியானது நடைபெற்றது.