கடல் அலையில் சிக்கிய வடமாநில இளைஞர்...!

கடல் அலையில் சிக்கிய வடமாநில இளைஞர்...!

சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே இளைஞர் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பொதுமக்கள் மூலம் மெரினா மீட்புக் குழுவினருக்கும், காவல் கட்டுப்பாட்டறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற மெரினா மீட்புக் குழுவினரும், அண்ணா சதுக்கம் போலீசாரும் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட வடமாநில இளைஞர் பெயர் தினேஷ் குமார் என்பதும், மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் தினேஷ் நாட்டு மருந்து கடையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், இன்று காலை நாட்டு மருந்து கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வரும் வழியில் கலங்கரை விளக்கம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடற்கரைக்கு சென்று சிறுநீர் கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட இளைஞரை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்...! பண்டிகைளுக்கு ஆர்வம் காட்டும் மக்கள்..!