கருணைமிகு காவிரி காவலனே நீ வாழ்க... வாழ்த்தி பாடிய நாடக கலைஞர்!!! 

கருணைமிகு காவிரி காவலனே நீ வாழ்க... வாழ்த்தி பாடிய நாடக கலைஞர்!!! 

அரிச்சந்திரன் வேடம் அணிந்து வந்த நாடகக்கலைஞர் ஒருவர் தனக்கான அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றுக்கொண்டு கருணைமிகு காவேரி காவலனே நீ வாழ்க என மாவட்ட ஆட்சியரை வாழ்த்தி பாட மாவட்ட ஆட்சியரும், கூடுதல் ஆட்சியரும் எழுந்துநின்று கைகூப்பி வணங்கினார்கள்.

தமிழ்நாடு முழுவதும் மேடைநாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து நாடக கலைஞர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.  அதன் படி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடையாள அட்டை பெற வந்த பேராவூரணியை சேர்ந்த நாடக கலைஞர் சீனிவாசன் அரிச்சந்திரன் கதாபாத்திரம் வேடம் அணிந்து வந்தார்.  இவரை பார்த்ததும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமர்ந்து இருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கினார்கள். 

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சீனிவாசனுக்கு நாடக கலைஞருக்கான அடையாள அட்டை வழங்கினார்.  அடையாள அட்டையை பெற்றுக்கொண்ட நாடக கலைஞர் சீனிவாசன் மாவட்ட ஆட்சியரை பார்த்து கருணைமிகு காவிரி காவலனே நீ வாழ்க என வாழ்த்தி பாடினார். மாவட்ட ஆட்சியரும், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா இருவரும் எழுந்துநின்று கைகூப்பி வணங்கினார்கள்.

இதையும் படிக்க:  துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு வழங்கியதை கண்டித்து போராட்டம்....!!