இது தக்காளிக்காக சேர்ந்த கூட்டம்!

இது தக்காளிக்காக சேர்ந்த கூட்டம்!

கடலூரில் ஒரு காய்கறி கடையில் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கூட்டம் அலைமோதி வருகிறது.

வட மாநிலங்களிலும் பெங்களூரிலும் கனமழை பெய்து வருவதன் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் காய்களின் விலைகள் அதிக அளவில் உயர்ந்துள்ளன. குறிப்பாக தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளி கடந்த ஒரு வார காலமாக 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். குறிப்பாக ஒரு கிலோ தக்காளி வாங்கும் மக்கள் 100 கிராம் 200 கிராம் வாங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை கடலூரில் ஒரு காய்கறி கடையில் தக்காளி கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை என பதாகை வைத்துள்ளார். இதனையடுத்து தக்காளியை வாங்க அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ஏராளமான முண்டியடித்து கொண்டு காய்கறி கடையில் தக்காளியை வாங்கினர். கடை உரிமையாளர் ஒரு நபருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்த அடிப்படையில் முண்டியடித்துக் கொண்டு அனைவரும் ஒரு கிலோ என இருபது ரூபாய்க்கு தக்காளி வாங்கிச் சென்றனர். இதனால் அந்த கடை முழுவதும் கூட்டம் அலைமோதியது.

இதையும் படிக்க:"ஓநாய்கள் ஆடுகள் போல் உடையணிந்து திரிகின்றன" நீதிபதி காட்டம்!