நெய்வேலியில், 46 கோரிக்கைகளுடன் உண்ணாவிரதப் போராட்டம்...

நெய்வேலியில், 46 கோரிக்கைகளுடன் உண்ணாவிரதப் போராட்டம்...

கடலூர் | பல வகையான கோரிக்கைகளுடன் நெய்வேல்யின் கியூ பாலத்தில் பலர் உண்ணாவிரதம் கடைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில்,

  • நெய்வேலி என்எல்சி-க்கு நிலம் கொடுப்பவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு

  • நிரந்தர வேலை வழங்க கோரியும் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள், இறந்து போன வாரிகளுக்கு வேலை வழங்க

  • இண்கோசர்விலிருந்து நிரந்தரமானவர்களுக்கு IW GRADE -II ( W1 SCALE) வழங்க

  • அனல் மின் நிலையத்தில் ஏற்படும் விபத்துகளை தடுக்க

  • சுரங்க உற்பத்தி பராமரிப்பில் அக்கறை செலுத்த

  • SME ஆப்ரேட்டர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப

  • என்.எல்.சி மருத்துவமனையில் தரமான மருந்து மாத்திரைகளை வழங்க

  • Non - AMC, SHORT TERM- காண்ட்ராக்டில் பணியாற்றுபவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி முழு சம்பளம், 26 நாட்கள் வேலை, மருத்துவ புத்தகம் வழங்க

போன்ற கோரிக்கைகள் உள்ளிட்ட 46 கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து நெய்வேலி கியூ பாலத்தில் சிஐடியு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | செவிலியர்களுக்கு 100% பணி பாதுகப்பு...ஒருசிலர் தவறாக வழி நடத்துவதாக அமைச்சர் குற்றச்சாட்டு!