மாலை முரசு செய்தி எதிரொலி; பொது கிணற்றை பயன்பாட்டிற்கு வர அதிகாரிகள் தீவிரம்..! மக்கள் நெகிழ்ச்சி..!

மாலை முரசு செய்தி எதிரொலி;  பொது கிணற்றை பயன்பாட்டிற்கு வர அதிகாரிகள் தீவிரம்..! மக்கள் நெகிழ்ச்சி..!

மாலை முரசு செய்தி எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பொது கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பீளாலம் (Belalam) கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இந்த கிராம குடிநீர் பிரச்சினை காரணமாக உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டத்தின் கிராம மக்களால் நிரந்தரமாக குடிநீர் கேட்டு மனு அளிக்கப்பட்டது.

பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 12 இலட்சம் மதிப்பீட்டில் பீளாலம் கிராமத்தில் 2021 ஆண்டு சமுதாய கிணறு அமைக்கப்பட்டது. மேலும் மறு சீரமைப்பு பணிக்காக மீண்டும் 8 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

கடந்த 2021 ஆண்டே இந்த பணிகள் நிறை பெற்ற நிலையிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில், குடிநீருக்காக அந்த கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமுதாய கிணறு அமைக்கும் பணிகள் நிறைவு அடைந்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு சாட்டி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நமது மாலைமுரசு தொலைக்காட்சி பீளாலம் கிராம மக்கள் கோரிக்கையை செய்தியாக வெளியிடப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார் ஆய்வுகளை மேற்கொண்டு ஓரிரு நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கிராம மக்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

சமுதாய கிணற்றை  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு செய்த ஊராட்சி நிர்வாக்திற்க்கும் மாலை முரசு தொலைகாட்சிக்கும் கிராம மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிக்க  | வட்டாட்சியர் பணியிடை நீக்கம்...ஆட்சியரைக் கண்டித்து வருவாய்த்துறையினர் போராட்டம்!