தாசில்தாரை ஏற்ற மறுத்த தனியார் பேருந்து: முற்றுகையிட்ட பொதுமக்கள்!

தாசில்தாரை ஏற்ற மறுத்த தனியார் பேருந்து: முற்றுகையிட்ட பொதுமக்கள்!

தாசில்தாரை ஏற்ற மறுத்த தனியார் பேருந்தை திருப்பத்தூரில் வழிமறித்து பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் தனி தாசில்தாராக பணியாற்றி வருபவர் கண்ணதாசன். இவர் மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு வருவதற்காக தனியார் பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது அப்பேருந்து நடத்துனர் திருப்பத்தூருக்கு செல்பவர்கள் "பேருந்து கிளம்பும்போது ஏறி கொள்ளுங்கள், இப்போது இறங்குங்கள்" என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கண்ணதாசன் பேருந்தை காவல் நிலையத்திற்கு விடுமாறு கூறியதை அடுத்து, அவரை பேருந்தில் ஏற்றி அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தகவல் திருப்பத்தூரில் பரவ, "இதே வேலையா போச்சு இந்த பிரைவேட் பஸ்காரங்களுக்கு" எனக் கூறி அண்ணா சிலை அருகே வந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக அண்ணா சிலை அருகே வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு போக்குவரத்து காவலர் கண்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை விடுவித்தார். இதனால் சுமார் 20 நிமிடங்கள் இப்குதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க:"15 நாட்களில் 2000 பேருக்கு பணியாணை" மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!