4 ஆண்டுகளாக திறக்கப்படாத பேருந்து நிலையம்...! அரசுக்கு கோரிக்கை விடுத்த மக்கள்...!

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சியில் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளாகத் திறக்கப்படாத நிலையில் இருக்கும் பேருந்து நிலையத்தை திறக்கக்கோரிய பொதுமக்கள்

4 ஆண்டுகளாக திறக்கப்படாத பேருந்து நிலையம்...! அரசுக்கு கோரிக்கை விடுத்த மக்கள்...!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி தாலுகாவில் தலைமையிடமாகவும் கரம்பக்குடி ஊராட்சி, ஒன்றியத்தின் தலைமை இடமாகவும் பல முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்திருக்கும் இடமாகவும் இருக்கும் முக்கியமான பகுதியில் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் 4 ஆண்டுகள் ஆகியும், இதுவரை திறக்கப்படாததால் பொது மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த பேருந்து நிலையம் திறக்கப்படாமல் இருப்பதால் சமூக விரோதிகள் அந்த இடத்தை  மது கூடாரமாக மாற்றி, அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த நிலையால் பேருந்து நிலையத்திற்கு வெளியே அனைத்து பேருந்துகளும் வரிசையில் நின்று, பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள், பெண்கள் மற்றும் நோயாளிகள் என பல தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் சில மாதத்திற்குள் திறந்து விடலாம் என்று பல ஆண்டுகளாக கூறி வருவதாக மக்கள்  தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகமும் அரசும் உடனடியாக தலையிட்டு பேருந்து நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் கரம்பக்குடி பேரூராட்சிக்கு மட்டுமன்றி கறம்பக்குடி தாலுகாவை சேர்ந்த மக்கள் பெரிதும் பயனைடவர் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.