மாட்டு கொட்டகையை துவம்சம் செய்த காட்டு யானை....!!

மாட்டு கொட்டகையை துவம்சம் செய்த காட்டு யானை....!!

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை கால்நடைகளை கட்டுவதற்காக அமைத்திருந்த மாட்டு கொட்டகைகளை சேதம் செய்ததோடு பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது மனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்கள் புகுந்து விவசாய பயிர்களை சேதம் செய்வதும் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் கடம்பூர் பவளகுட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கட்டுவதற்காக அமைத்திருந்த மாட்டு கொட்டகைகளை சேதம் செய்ததோடு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முற்பட்ட பொதுமக்களையும் துரத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதம் செய்வதாகவும், ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் அப்பகுதி விவசாயிகள் இதுபோன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயி பயிர்களை சேதம் செய்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை கடம்பூர் வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க:  கிழக்கு மத்திய வங்க கடல் உள்ள மிக அதி தீவிர "மோக்கா" புயல்....!!