கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு! காரணம் என்ன?

கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு! காரணம்  என்ன?

மண்டபம் அருகே 500 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்து கரை ஒதுங்கியுள்ளது.  இதற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அரிய வகை கடல் உயிரினமான கடல் பசு அதிக அளவில் வாழ்ந்து வருகின்றது. ஆனால் சிலகாலமாக நாளுக்கு நாள் கடல் பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையொட்டி வனத்துறை மற்றும் மத்திய கடல் வாழ் உயிரின விஞ்ஞானிகள் கடல் பசுவை பாதுகாப்பது குறித்து மீனவர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மண்டபம் அருகே தோனித்துறை கடற்கரை பகுதியில் 500 கிலோ எடை கொண்ட ஆண் கடல்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து புதைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் கடல் பசு பாறை அல்லது கப்பலில் மோதி உயிரிழந்ததா? அல்லது சமூக விரோதிகளின் குற்றச்செயல்களினால் உயிரிழந்ததா? என பல்வேறு கோணங்களில் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:விமரிசையாக நடந்த மாடு மாலை தாண்டும் திருவிழா!