பழங்குடியினருக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு...! பழங்குடிகள் சங்க தலைவர் கோரிக்கை..!!

பழங்குடியினருக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு...! பழங்குடிகள் சங்க தலைவர் கோரிக்கை..!!

பழங்குடியினருக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி  நடப்பு பட்ஜெட் தொடரிலேயே அறிவிப்பை வெளியிட வேண்டும் என மன்னார்குடியில் மாநில பழங்குடிகள் சங்க உயர்மட்டகுழு தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு  (பழங்குடியினர்) காட்டு நாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அச்சங்கத்தின் மாநில உயர்மட்டகுழு தலைவர்  அழகு.பரமசிவம் தலைமையேற்றார்.  

நிகச்சி நிறைவின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழக அரசு பழங்குடியினருக்கு உள்ள 1 சதவிகித இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக  உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

மேலும், பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் என்கிற இடங்களை சேர்த்துள்ளதால் பழங்குடியினருக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சத்தினால் நரிக்குறவர்களுக்கு உள்ள எம்பிசி இட ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு 5 சதவிகிதத்தை ஒதுக்கி நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.