காலணி தொழிற்சாலையில் 2-வது முறையாக தீ விபத்து ...

ஆம்பூர் அருகே பரிதா குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் 2-வது முறையாக தீ விபத்து ஏற்பட்டது.

காலணி தொழிற்சாலையில் 2-வது முறையாக தீ விபத்து ...

திருப்பத்தூர் | ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் பகுதியில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது். இத்தொழிற்சாலையில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில்  தொழிற்சாலையில் வெளியேற்றப்படும் தோல் கழிவுகளை தொழிற்சாலைக்கு பின் பக்கம் கொட்டி வைக்கப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில்  தோல் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள  இடத்தில் இன்று  திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ பரவி எரிந்தது.

மேலும் படிக்க | திடீரென தீ பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்...

இதுகுறித்து  உடனடியாக தொழிற்சாலை ஊழியர்கள் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று  தீயணைப்பு  துறையினர் தொழிற்சாலையிற்கு விரைந்து சென்று சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீவிபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டதில் ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன் இத்தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

மேலும் படிக்க | மேட்டுப்பாளையம் பழைய இரும்பு கடை அருகே தீ விபத்து..!

அதில் சேதமடைந்த கட்டிடம் மற்றும் இரும்பு பொருட்களை கேஸ்  வெல்டிங் வைத்து அகற்றிய போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக 26.09.2023 இதே தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுபலகோடி ரூபாய் மதிப்பிலான காலணி உதிரிபாகங்கள் எரிந்து  சேதமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வாக்காளர்களின் தரவுகள் விற்பனையாகிறதா...? முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் அலுவலர்!