பேருந்து கண்ணாடி உடைப்பு...பாமக நிர்வாகி கைது!!

பேருந்து கண்ணாடி உடைப்பு...பாமக நிர்வாகி கைது!!

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செஞ்சி பகுதியில் 3 அரசு பேருந்து, 1 தனியார் பேருந்து, 1 லாரியின் கண்ணாடிகளை உடைத்த பாமக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கலையூர் கூட்டு சாலை பகுதிகளில் பீர் பாட்டில் வீசி பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இதில் பஸ் டிரைவர் செந்தில்குமார் என்பவருக்கு கையில் கண்ணாடி பாட்டில் கிழித்து காயம் ஏற்பட்டது. அவர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், அதே போல் தொடர்ந்து மேலும் அந்த வழியாக சென்ற இரண்டு அரசு பேருந்துகளையும், ஒரு தனியார் பேருந்தையும், ஒரு லாரியையும் பீர் பாட்டில்கள் வீசி, கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த செஞ்சி போலீசார், விரைந்து சென்று விசாரணை செய்ததில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தெரிய வந்த நிலையில், போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் பாமக நிர்வாகி அறிவழகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க || திசையன்விளை வழக்கு: காவல்துறை வழக்கை திசை திருப்ப முயற்சி... உறவினர்கள் போராட்டம்!!