கஞ்சா மற்றும் கார் திருட்டு... பட்டதாரி வாலிபர் கைது...

ஆம்பூரில் கஞ்சா மற்றும் கார் திருட்டு வழக்கில் பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா மற்றும் 2 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கஞ்சா மற்றும் கார் திருட்டு... பட்டதாரி வாலிபர் கைது...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை , கோடியூர் பகுதியில்  கள்ளத்தனமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த  ஆம்பூர் பகுதியை ஜெகன்குமார் என்ற வாலிபரை அவர்கள் கைது செய்தனர். 

அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. பின்னர் ஜெகன் குமார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார்,   2 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த  40 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் கார்களை திருடுவதையும் அவர் ஒரு தொழிலாக செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர் கொடுத்த தகவலின்படி, திருப்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆறரை லட்சம் மதிப்பிலான இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து வழக்குகளில் பதிவு செய்த போலீசார், ஜெகன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்