செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்; உயர் நீதிமன்றத்திடம் அறிவுரை கேட்கும் சிறப்பு நீதிமன்றம்!

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்; உயர் நீதிமன்றத்திடம் அறிவுரை கேட்கும் சிறப்பு நீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்பது குறித்து,  சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  

செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை  சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ரவி, அமலாக்கத் துறையின் வழக்கில் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதை சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பினர் உயர் நீதிமன்றத்தை நாட உள்ளனர். 

இதையும் படிக்க: கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நடத்தினால் தகுதிநீக்கம்; உயர்நீதிமன்றம் உத்தரவு!