மீண்டும் ஒரு அரசு அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி... பரபரப்பான சம்பவம்...

முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் சென்னை தலைமை செயலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் ஒரு அரசு அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி... பரபரப்பான சம்பவம்...

கும்பகோணம் மாவட்டத்தை சேர்ந்த விமலா, தனது நிலத்தை கும்பகோணம் மாநகராட்சிக்கு குத்தகைக்கு விட குத்தகை காலம் முடிந்து மாநகராட்சி நிர்வாகம், திரும்ப ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகிய இடங்களில் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் சென்னை தலைமைச் செயலகத்திற்குள் கையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் நுழைந்த பெண் ஒருவர் பாதுகாப்பு சோதனைகளை எல்லாம் மீறி தலைமைச் செயலகத்திற்கு உள்ளே சென்று தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

மேலும் படிக்க | மலைக்குறவர் தீக்குளித்து மரணம்... இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்...

உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பெண்ணை தடுத்து நிறுத்தி தலைமைச் செயலகத்திற்கு வெளியே அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைமைச் செயலகத்திற்குள் புகார் அளிக்கச் செல்லும் ஒவ்வொருவரும் போலீசாரின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில் பெண்ணின் கையில் எப்படி மண்ணெண்ணெய் பாட்டில் வந்தது?எனவும் பெண்ணை உள்ளே யார் அனுப்பியது? எனவும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | இளமையாக இருக்க நரமாமிசம்... 56 துண்டுகளாக வெட்டிய பயங்கரம்...

முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் கும்பகோணம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தலைமைச் செயலகத்திற்கு உள்ளே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்