மலைக்குறவர் தீக்குளித்து மரணம்... இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்...

மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தீக்குளித்து இறந்த சம்பவம் தொடர்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
மலைக்குறவர் தீக்குளித்து மரணம்... இரண்டாவது நாளாக தொடரும்  போராட்டம்...
Published on
Updated on
1 min read

மலைக்குறவர் தீக்குளித்து உயிரிழப்பு

மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது இரு குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு ஐந்து வருட காலமாக  தனது மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை அலுவலகத்திற்கு அலைந்துள்ளார். ஆனால் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து சாதி சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர். 

அதனால் விரக்தியடைந்த வேல்முருகன் உயிர் நீதிமன்றம் வளாகம் அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இரண்டாவது நாளாக வேல்முருகன் உடலை வாங்க மறுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாலை முரசுக்கு பேட்டியளித்த வேல்முருகனின் மனைவி

வேல்முருகன் தனது குழந்தைகள் படிப்பிற்கு ஜாதி சான்றிதழ் வழங்க கோரி ஐந்து வருடமாக தொடர்ந்து போராடினார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்ற போது அங்கிருந்த பெண் அதிகாரி வேல்முருகனை தரைகுறைவாக பேசியுள்ளார். இதனால் தன கணவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், தனக்கு ஜாதி சான்றிதழ் உள்ளது தன் குழந்தைகளுக்கும் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி உயிர் நீதிமன்றத்தை நாடியவர் எதிர்பாராத விதமாக தீக்குளித்துள்ளார் என்று வேலுமுருகனின் மனைவி சித்ரா கூறியுள்ளார்.


மேலும் அவரது மனைவி சித்ரா முதலமைச்சரை சந்திக்க உள்ளதாகவும், மலைக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த அனைவருக்கும் சாதி சான்றிதழ் கிடைப்பதற்காக தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.


 50 லட்சம் நிதி உதவி, அரசு வேலை

வேல்முருகனின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி உதவியும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மலைகுறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு அதிகாரிகள் எத்தனை மெத்தனப்போக்காக செயல்பட்டால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் வேல்முருகன் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com