ஓ.பி.எஸ் தளபதியை நெருங்கும் இ.பி.எஸ்...! திட்டமிட்டபடி ஜீலை 11 பொதுக்குழு...!

ஓ.பி.எஸ் தளபதியை நெருங்கும் இ.பி.எஸ்...! திட்டமிட்டபடி ஜீலை 11 பொதுக்குழு...!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுகவில் பல பிளவுகள் ஏற்பட்டாலும் கடந்த 4 ஆண்டுகளாக இரட்டை தலைமையின் கீழ் அதிமுக பயணித்து வந்தது. ஜூன் 14 ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இரட்டை தலைமையை தூக்கி எறியும் வகையில் மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி ஒற்றை தலைமை கோஷத்தை கையில் எடுத்தார். கடந்த 4 ஆண்டுகளாக இரட்டைக்குழு துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த இ.பி.எஸ், ஓ.பி.எஸ் எதிரெதிர் துருவ அரசியலை தொடங்கினர்.

இந்தசூழலில் பொதுசெயலாளர் பதவியை பிடிக்க இ.பி.எஸ்-ம், அதிமுகவை கைப்பற்ற ஓ.பி.எஸ்-ம் தீவிரம் காட்டி வருகின்றனர். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அதிமுகவில் அதிகாரத்தை தக்க வைக்க மாறி மாறி வியூகம் அமைக்கின்றன.

ஜீலை 11 பொதுக்குழு:

ஜீலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என கடந்த 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு மேடையில் எழுச்சியுடன் அறிவித்தார் சிவி.சண்முகம். இந்நிலையில் ஓ.பி.எஸ் - ன் தூண்டுதலின் பேரிலேயே முன்னாள் அமைச்சர் எ.பி. வேலுமணி மீது ஓ.பி.எஸ் தூண்டுதலின் பேரிலேயே  ரெய்டு நடப்பதாக சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். ஓ.பி.எஸ் எந்த வியூகம் அமைத்தாலும் அதனை முறியடித்து அதிமுகவின் பொதுக்குழு , செயற்குழுவை எழுச்சியுடன் நடத்தி காட்டுவேன் எனவும் சி.வி. சண்முகம்  சபதம் எடுத்துள்ளார். இதனால் ஜூலை 11 ல் நடக்கப்போவதாக அறிவித்துள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பி.எஸ் தளபதியை நெருங்கும் இ.பி.எஸ் ஆதரவாளர்கள்: 
 
இதனிடையே ஓ.பி.எஸ் -ன்  தளபதியாக அறியப்படும் வைத்திலிங்கத்தையும் தங்கள் அணியில் இணைக்க இ.பி.எஸ் தரப்பு காய்களை நகர்த்துவதாக கூறப்படுகிறது. அதிமுகவின் ஒற்றை தலைமை கோஷம் எழுந்த போதே ஓ.பி.எஸ் - க்கு ஆதரவாக துணிந்து குரல் கொடுத்தவர் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். அதிமுக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் அவமானப்படுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சையின் போதும், ஓ.பி.எஸ் - ன் டெல்லி பயணத்தின் போதும் அவருக்கு ஆதரவாக வைத்திலிங்கமே முதன்மையாக இருக்கிறார். இந்த பின்னணியில் வைத்திலிங்கத்தை தங்கள் அணியில் சேர்க்க இ.பி.எஸ் தரப்பு தீவிரம் காட்டுவதாக் கூறப்படுகிறது. அதிமுகவில் உயர்ந்த பதவியை கொடுக்க திட்டம் வகுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க கூடிய வைத்திலிங்கம் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அவர் ஓ.பி.எஸ் அணியில் சேர்வாரா? திட்டமிட்டபடி ஜீலை 11-ல் அதிமுக பொதுக்குழு , செயற்குழு கூட்டம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.