ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டது யார்? மரணத்தின் கடைசி நிமிடங்கள்...

ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டது யார்? மரணத்தின் கடைசி நிமிடங்கள்...

1.  துப்பாக்கிச் சூடு நடத்தியவர் டெட்சுயா யமகாமி எனவும் அவர் உள்ளூரை சேர்ந்தவர் என்றும் அறிக்கைகள் அடையாளம் காட்டுகின்றன.

2. டெட்சுயா யமகாமி, 41 வயதுடைய  ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் உறுப்பினர் என்று கருதப்படுகிறது.

3.  அவர்  துப்பாக்கிச் சூடு நடத்தியபோது,  ஷின்சோ அபேயின் பின்னால் 10 அடி தொலைவில் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது.

4.  ஷின்சோ அபே மேடையில்  பேசிக்கோண்டிருக்கும் போதே கீழே சரிந்து விழுந்தார்.  யமகாமி, ஷின்சேவின் பாதுகாவலரால் பிடிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.

5. துப்பாக்கிசூடு நடத்திய யமகாமி தப்பி ஓட முயற்சிக்கவில்லை என   ஜப்பானின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது.

6.  தற்போது ஜப்பானின் நர நிஷி காவல் நிலையத்தில் டெட்சுயா யமகாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

7.  அபேவை கொல்லும் நோக்கத்துடன் தான் குறிவைத்ததாக  போலீசாரிடம் கூறியுள்ளார்  என்று அறிக்கைகள் மூலம் தெரியவருகிறது.

8.  ஷின்சோ அபே மீது அதிருப்தியில் இருந்ததாக யமகாமி  கூறியதாக தெரிகிறது.

9.  குறுகிய எல்லையில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கியை பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10.  துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அவரே அந்த துப்பாக்கியை தயாரித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.