"அமைதியை விரும்புவோர் நாங்கள்".. படைகளை அனுப்ப முடியாது- மெக்சிகோ அதிபர் திட்டவட்டம்

உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை தங்கள் நாடு அனுப்பாது என மெக்சிகோ அதிபர் தெரிவித்துள்ளார்.

"அமைதியை விரும்புவோர் நாங்கள்".. படைகளை அனுப்ப முடியாது- மெக்சிகோ அதிபர் திட்டவட்டம்

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பும் நிறைய உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. ரஷ்யா படை உக்ரைன் நாட்டின் முக்கிய இடங்களை கைப்பற்ற தீவிர செயல்பட்டு வருகிறது.

போரில் ஆயுதம் ஏந்துமாறு பொதுமக்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.இதையடுத்து ராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கு ராணுவ பயிற்சி அளித்து வருகின்றனர்.

மேலும் உக்ரைனுக்கு எந்த நாடுகளும் நேரடியாக ராணுவ உதவிகளை வழங்கவில்லை.. இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உலக நாடுகள் உறுதி அளித்துள்ளது. ஆனால், தங்கள் நாட்டுக்கு ராணுவ ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. 

அந்த வகையில், போரில் ரஷ்யா படைகளை எதிர்கொள்ள தங்களுக்கு ராணுவ உதவிகளை அனுப்பி வைக்குமாறு மெக்ஸிகோ அரசிடம் உக்ரைன் உதவி கோரி இருந்தது. ஆனால், இதற்கு மெக்ஸிகோ அதிபர் அண்ட்ரெஸ் மேனுவல் கூறியது, உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் நாட்டு படைகளையோ ஆயுதங்களையோ அனுப்ப முடியாது என்றும் தாங்கள் அமைதியை விரும்புவோர் என்றும் தெரிவித்துள்ளார்.