17 ஆண்டு முயற்சியை சாதனையாக்கிய விர்ஜின் நிறுவனம்

மனிதர்களுடன் விண்ணுக்கு புறப்பட்டு சென்ற விர்ஜின் கேலக்டிக் விண்கலம், வெற்றிகரமாக பூமியை அடைந்துள்ளது.

17 ஆண்டு முயற்சியை சாதனையாக்கிய விர்ஜின் நிறுவனம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விர்ஜின் நிறுவனம், தனது விண்கலத்தின் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் சுற்றுலா திட்டத்தை தொடங்க திட்டமிட்டது.

இதற்கென அந்நிறுவனத்தின் தலைவர் சர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 6 பேர்  தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் விண்வெளி சுற்றுலா செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இவர்கள் நேற்று நியூ மெக்ஸிக்கோவில் உள்ள விண்வெளி தளத்திலிருந்து புறப்பட்ட நிலையில், இந்த டெஸ்ட் விண்கலம், 90 கிலோ மீட்டர் உயரம் வரை விண்வெளிக்கு சென்று பின்னர் வெற்றிகரமாக மிதக்கத் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து எஞ்சின்கள் எதிர் திசையில் இயக்கப்பட்டு, பூமியை நோக்கி திரும்பின. இந்த 90 நிமிட பயணம் தனது வாழ்நாள் அனுபவம் என ரிச்சர்ட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.