கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து காணப்படும் பதற்றத்துக்கு அமெரிக்காவே காரணம்…  

கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் அதிகரித்து காணப்படுவதற்கு அமெரிக்காவே மூல காரணம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குற்றம்சாட்டியுள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கொரிய தீபகற்ப கடல் பகுதியில் வடகொரியா தடைசெய்யப்பட்ட அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்சியாக செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் பங்கேற்று பேசிய அதிபர் கிம் ஜாங் உன், கொரிய தீபகற்ப பகுதியில் நிலவி வரும் பதற்றங்களுக்கு அமெரிக்காவே மூல காரணம் என கூறினார்.

வடகொரியாவுடன் எந்தவித விரோதபோக்கும் இல்லை என அமெரிக்கா அதிபர் கூறுவதை உலக நாடுகள் நம்பாது என்று கூறிய அவர், வடகொரியாவுடன் விரோத போக்கு இல்லை என்பதை நம்பும் வகையில் அமெரிக்கா எந்த செயலையும் செய்ததில்லை எனவும் சாடினார்.