சீனாவில் அதிகரித்துள்ள யானைகள் எண்ணிக்கை!!

சீனாவில் அதிகரித்துள்ள யானைகள் எண்ணிக்கை!!

சீனாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பு காரணமாக ஆசிய யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

யுனான் மாகாணத்தில் உள்ள மழைக்காடு சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய பகுதியாக பராமரிக்கப்படுகிறது. யானைகளின் வாழ்விடங்களின் தரத்தை மேம்படுத்துவது, மனித-யானை மோதல்களை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் யுனான் மழைக்காட்டில் மட்டும் 180 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது 360 ஆக அதிகரித்துள்ளது.

சிறந்த பாதுகாப்பிற்காக பிராந்தியங்களுக்கு இடையேயான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆய்வை ஒருங்கிணைக்க, ஆசிய யானைகளுக்கு மழைக்காடு தேசிய பூங்காவை உருவாக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:   முதலமைச்சர் கருத்துக்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் பொன்முடி!!