காவலுக்கு மாற்றப்பட்ட ஷின்சோ அபே குற்றவாளி.....

காவலுக்கு மாற்றப்பட்ட ஷின்சோ அபே குற்றவாளி.....

குற்றம் சாட்டப்பட்ட டெட்சுயா யமகாமி, ஷின்சோ அபேயின் படுகொலைக்குப் பிறகு மனநிலை பரிசோதனைக்காக ஆறு மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.  

காவலுக்கு மாற்றம்:

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை கொன்றதாக கூறப்படும் நபர் மீது வழக்குரைஞர்கள் முறைப்படி கொலைக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.  குற்றம் சாட்டப்பட்ட டெட்சுயா யமகாமி, ஷின்சோ அபேயின் படுகொலைக்குப் பிறகு மனநலப் பரிசோதனைக்காக ஆறு மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.  தற்போது அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

துப்பாக்கிச் சூடு:

ஜப்பானின் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் தீவிரம் அடைந்திருந்த நிலையில் அதற்காக, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானின் நாராவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது, அவர் சுடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.  மார்பு மற்றும் கழுத்துப்பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில், ஷின்சோ அபே தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.  

மேலும் தெரிந்துகொள்க:  ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டது யார்? மரணத்தின் கடைசி நிமிடங்கள்...

உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்ற அவரை மீட்பதற்காக மருத்துவக்குழுக்கள் தீவிரமாக போராடின. தொடர் சிகிச்சையும், தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ உதவிகள் பலன் அளிக்காமல் ஷின்சோ அபே உயிரிழந்தார்.

யார் இந்த டெட்சுயா?:

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் டெட்சுயா யமகாமி மற்றும் அவர் உள்ளூரை சேர்ந்தவர் .  டெட்சுயா யமகாமி, 41 வயதுடைய  ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் உறுப்பினர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் பணியாற்ற முடியாது....சட்டமசோதா நிறைவேற்றம்....