தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் பணியாற்ற முடியாது....சட்டமசோதா நிறைவேற்றம்....

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் பணியாற்ற முடியாது....சட்டமசோதா நிறைவேற்றம்....

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் பணியாற்ற முடியாது என்ற சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது.

2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டத்தை திருத்தும் மசோதாவை முன்னதாக மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  தமிழில் போதிய அறிவு இல்லாதோர் தகுதிபெற்று பணியில் சேர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து ஆட் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி கட்டாயம் என்ற அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இச்சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் ஆவேசத்துடன் எதிர்ப்பு தெரிவித்தார். வடமாநிலத்தவர்கள் குறுகிய காலத்தில் தமிழை பயின்று தேர்ச்சி பெற்றால் என்ன செய்வது என கேள்வியெழுப்பிய அவர், தமிழ்நாட்டின் பூர்வகுடிகளுக்கு மட்டுமே பணிவழங்க வேண்டும் என சட்டம் திருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.  இதைத்தொடர்ந்து சட்டமசோதா, பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  விஜய், அஜித் மீது புகாரளித்த சமூக ஆர்வலர்.....