ஐநா மனித உரிமைகள் ஆணைய சிறப்புக் கூட்டத்தை புறக்கணிப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவிப்பு! காரணம் இதுதானா?

உக்ரைன் தொடர்பாக நாளை நடக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணைய சிறப்புக் கூட்டத்தை புறக்கணிப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணைய சிறப்புக் கூட்டத்தை புறக்கணிப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவிப்பு! காரணம் இதுதானா?

உக்ரைன் மீதான தாக்குதலில் இதுவரை 3 ஆயிரத்து 381 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது மேலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகம் என கணிப்பதாகவும், அதேநேரம் மரியுபோல் நகர மக்கள் பலி குறித்து எந்த தகவலும் பெற முடியாத நிலை என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து ஐநா மனித உரிமைகள் ஆணைய சிறப்பு அமர்வு நாளை உக்ரைனில் கூட உள்ளது. ஆனால், இதில் பங்கேற்கப் போவதில்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துரதிர்ஷ்டவசமாக, சிறப்பு ராணுவ நடவடிக்கையின் உண்மையான குறிக்கோள்கள் மற்றும்  நிலைமைகள் தொடர்பான ரஷ்யாவின் வாதங்கள் மற்றும் விளக்கங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதால் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.