33 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட மகனை வரைபடம் இணைத்து வைத்த ரூசிகர சம்பவம்...

நான்கு வயதில் குழந்தை கடத்தல் கும்பலுக்கு விற்கப்பட்டவர் ஜனவரி 1 ஆம் தேதியன்று தனது தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

33 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட மகனை வரைபடம் இணைத்து வைத்த ரூசிகர சம்பவம்...

லி ஜிங்வேய்க்கு நான்கு வயதாக இருந்தபோது, அவரது வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டு, குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றுக்கு விற்கப்பட்டார்.அவர் டிசம்பர் 24ஆம் தேதியன்று, அவர் கையால் வரையப்பட்ட ஒரு வரைபடத்தை , 'டெளயின்' என்ற வீடியோ பகிர்வு செயலியில் பகிர்ந்துள்ளார்.  இது ஒரு சிறிய கிராமத்துடன் பொருந்தி போவதை காவல்துறை கண்டறிந்தனர். மேலும், அவர்கள் அங்கு  தனது மகன் தொலைத்த பெண் ஒருவர் இருப்பதையும் கண்டறிந்தனர்.

டி.என்.ஏ பரிசோதனைக்குப் பிறகு, அவர்கள் சனிக்கிழமையன்று யுனான் மாகாணத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, இருவரும் முதல்முறையாக சந்தித்த வீடியோவானது வெளியானது, அதில் லி ஜிங்வேய் தனது தாய் அணிந்திருந்த கொரோனா வைரஸ் முகமூடியை கவனமாக அகற்றி, அவரது முகத்தை பார்த்தார். அதன் பின்,கண்ணீருடன் உடைந்து அவரை அணைத்துக்கொண்டார்.

லி ஜிங்வேய் தான் சிறு வயதில் வளர்ந்த கிராமத்தின் வரைபடத்தை நினைவுக்கூர்ந்து  வரைந்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இப்போது தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் வசிக்கும் அவர், அவரது வளர்ப்பு பெற்றோரிடம் கேட்டதிலோ, அவரது தோற்றம் குறித்து டிஎன்ஏ தரவுகளை ஆராய்ந்ததிலோ எந்த வெற்றியும் அடையவில்லை. எனவே அவர் இணையத்தை நாடினார்.

"நான் எனது வீட்டை கண்டுபிடிக்கும் ஒரு குழந்தை. எனக்கு நான்கு வயதாக இருந்தபோது, ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்னை ஹெனானுக்கு அழைத்துச் சென்றார்," என்று அவர்  ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.  இது ஆயிரக் கணக்கான முறை பகிரப்பட்டது." நான் நினைவு கூர்ந்து வரைந்த எனது வீடு இருக்கும் பகுதியின் வரைபடம்", என்று கூறினார். 

ஆண் குழந்தை இருப்பதை முக்கியமாக கருதும் சமூகமான சீனாவில் குழந்தை கடத்தல்கள் வழக்கமாக நடைபெறும் ஒன்றாக கருதப்படுகிறது. பல குழந்தைகள் இளம் வயதிலேயே கடத்தப்பட்டு வேறு குடும்பங்களுக்கு விற்கப்படுகின்றனர். சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் 20,000 குழந்தைகள் கடத்தப்படுவதாக, 2015ஆம் ஆண்டின் ஆய்வின் போது தெரியவந்தது.கடந்த ஜூலை மாதம், ஷான்டாங் மாகாணத்தில் கடத்தப்பட்ட குவோ காங்டாங் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனுடன் மீண்டும் இணைந்தார்.