எரிவாயு விலை கண்டித்து நடத்திய போராட்டத்தில் கலவரம் :  164 பேர் உயிரிழப்பு!

கஜகஸ்தானில் அரசுக்கு எதிரான கலவரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.கலவரத்தில் ஈடுபட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிவாயு விலை கண்டித்து நடத்திய போராட்டத்தில் கலவரம் :  164 பேர் உயிரிழப்பு!

எண்ணெய் வளங்கள் நிறைந்த கஜகஸ்தானில், கடந்த சில வாரங்களுக்கு முன் எரிவாயு விலை அதிகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசுக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் பொதுச்சொத்துக்கள் பல சேதப்படுத்தப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.  

மேலும் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்யாவும் தனது துருப்புக்களை அனுப்பி வைத்திருந்தது. இந்தநிலையில், அரசுக்கு எதிரான கலவரத்தில் 164 பேர் உயிரிழந்திருப்பதாகவும், வெளிநாட்டவர்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்து  800 பேரை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் அந்நாட்டு அரசு  தெரிவித்துள்ளது. இதனிடையே கஜகஸ்தானில் நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.