தாய்லாந்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தாய்லாந்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. இதனால் அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை 80 சதவீதம் வரை குறைந்தது.

இந்த நிலையில் சுற்றுலா துறையை மீட்டெடுக்கும் விதமாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தாய்லாந்து அரசு நீக்கியுள்ளது.

அதன்படி குறைவான ஆபத்துடைய 60-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக எல்லைகளை திறப்பதாக, தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

எனினும் தாய்லாந்து செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலா பயணிகள், தாய்லாந்து சென்ற பிறகு தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் எல்லை என கூறப்பட்டுள்ளது.