பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டால் 90சதவீதம் வரை உயிரிழப்பு குறையும்!!..

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 90சதவீதம் உயிரிழப்பை குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டால் 90சதவீதம் வரை  உயிரிழப்பு குறையும்!!..

2 டோஸ் தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில், பூஸ்டர் டோஸ் கொரோனா இறப்பு விகிதத்தை 90 சதவீதம் வரை குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

டெல்டா பரவலின் போது நடத்தப்பட்ட ஆய்வில் பூஸ்டர் டோஸ் இறப்பு விகிதத்தை குறைத்ததாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களை காட்டிலும் பரவல் விகிதம் 10 சதவீதமும், உயிரிழப்பு விகிதம் 90 சதவீதமும் பூஸ்டர் டோஸ் கட்டுப்படுத்தியவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் பயனளிக்கும் வகையில் இருக்கும் என நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.