பாகிஸ்தானில் 6 நாட்களுக்குள் தேர்தலை அறிவிக்க வேண்டும் - இம்ரான் கான் எச்சரிக்கை

பாகிஸ்தானில் 6 நாட்களுக்குள் தேர்தலை அறிவிக்க வேண்டும் - இம்ரான் கான் எச்சரிக்கை

பாகிஸ்தானில் 6 நாட்களுக்குள் தேர்தலை அறிவிக்காவிட்டால் அரசுக்கு எதிரான போராட்டத்தை  மீண்டும் தொடர்வேன் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுடன் அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டார். தடுப்புகளை மீறி தலைநகருக்குள் அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்த முயன்றதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஆதரவாளர்களிடம் தெரிவித்த  இம்ரான் கான், அரசு 6 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  எச்சரித்துள்ளார்.

முன்னதாக ஆளும் கட்சியை சாடிய அவர், ஆட்சியை தக்க வைத்து கொள்ள எதிர்கட்சியினர் மீது ரெய்டு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தந்திரமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.