உலக நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியா..!! காரணம் என்ன?!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியா..!! காரணம் என்ன?!!

அணு ஆயுதப் போர் திறனை நிரூபிப்பதில் மற்றொரு வெற்றியையும் பெற்றுள்ளது வடகொரியா .  

கடந்த புதன்கிழமை ஏவப்பட்ட இரண்டு கப்பல் ஏவுகணைகள் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாகக் கூறியுள்ளது வடகொரியா அரசு.

இலக்கை தாக்கிய ஏவுகணை:

ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் மஞ்சள் கடல் மீது, கொரிய தீபகற்பத்திற்கும் சீனாவிற்கும் இடையில் பறந்து அடையாளம் காணப்படாத இலக்கை அடைய கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் காற்றில் பயணித்து இலக்கை தெளிவாக தாக்கின என்று வடகொரியா அரசின் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது .

கிம்மின் திருப்தி:

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஏவுகணைகளை மேற்பார்வையிட்டு சோதனை முடிவுகளிலும் "மிகுந்த திருப்தி" தெரிவித்ததாகவும் ஊடகம் அறிவித்துள்ளது.

ஜப்பானையும்...:

2,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து புதன்கிழமை ஏவப்பட்ட கப்பல் ஏவுகணைகள் தென் கொரியாவின் தென்கிழக்கு முனையில் உள்ள முக்கிய நகரமான பியோங்யாங்கிலிருந்து பூசான் வரையிலான தூரத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு தூரம் பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.  ஏவுகணைகள் ஜப்பானில் உள்ள எந்த இலக்கையும் தாண்டிச் செல்ல முடியும். 

மேலும் தெரிந்துகொள்க:   ஜப்பானை அலற விட்ட வட கொரியா!!! எச்சரிக்கை விடுத்த ஜப்பான்!!!

அமெரிக்க இலக்குகளையும்..:

கடந்த வாரம்தான், வடகொரியா அதனுடைய மிக நீண்ட தூர ஏவுகணை சோதனையை நடத்தியது.  அதற்குள் மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளது.  விமானத்தில் 4,600 கிலோமீட்டர் தொலைவில் இருந்து  ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியது. நாட்டின் Hwasong-17 பாலிஸ்டிக் ஏவுகணை குறைந்தபட்சம் 15,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது.  இது அமெரிக்க இலக்குகளை மிக எளிதாக அடைய முடியும்.

இதையும் படிக்க:   அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!!

அதிபர் கிம் கூறியதென்ன?:

" எந்தவொரு முக்கியமான இராணுவ நெருக்கடியையும் போர் நெருக்கடியையும் எந்த நேரத்திலும் உறுதியுடன் தடுக்கவும், அதில் முழுமையாக முன்முயற்சி எடுக்கவும் " வட கொரியாவின் அணுசக்திப் படைகளின் "செயல்பாட்டுத் துறையை" தொடர்ந்து விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக வடகொரியா அதிபர் கிம் கூறியுள்ளார்.

எதற்காக?:

ஆக்கிரமிப்பாளர்களை "அழிப்பதற்கு" வட கொரியாவின் அணுசக்தி படைகளின் தயார்நிலையை உறுதிப்படுத்துவதற்காக இந்த சோதனைகள் செய்யப்பட்டதாக கிம் கூறியுள்ளார் . 

தென்கொரிய அதிபர் எச்சரிக்கை:

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் திங்களன்று, பியோங்யாங்கின் அணுசக்தி சோதனையை "கடுமையான பாதுகாப்பு யதார்த்தத்தை" எதிர்கொள்கிறது என்று எச்சரித்துள்ளார்.  சியோலில் இருந்து பொருளாதார உதவிக்கு ஈடாக அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான யூன் முன்மொழிவை ஆகஸ்ட் மாதம் வட கொரியா நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  திங்களன்று, கிம் தென் கொரியா அல்லது அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுக்களையும் நிராகரித்துள்ளார்.  

வடகொரியாவின் பதில்...:

இதுகுறித்து கிம் பேசுகையில் எதிரிகள் "எங்களுக்கு இராணுவ அச்சுறுத்தல்களை முன்வைக்கும் போது இன்னும் உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

                                                                                                        -நப்பசலையார்

இதையும் படிக்க:    ”ஹிஜாப் வேண்டும்...” நீதிபதி துலியா ஆதரிக்கும் காரணம் என்ன?!!...யார் இந்த நீதிபதி துலியா?!!