ஜப்பானை அலற விட்ட வட கொரியா!!! எச்சரிக்கை விடுத்த ஜப்பான்!!!

ஜப்பானை அலற விட்ட வட கொரியா!!! எச்சரிக்கை விடுத்த ஜப்பான்!!!
Published on
Updated on
2 min read

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சர்வாதிகாரம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் போல இந்த முறையும் வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணையை பரிசோதித்ததில், ஏவுகணை ஜப்பானை கடந்து சென்று அங்குள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.  

பாதுகாப்பு:

ஏவுகணை தாக்குதலால் வெளியில் சுற்றித் திரிந்தவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை பாதுகாத்து கொண்டனர். இதுமட்டுமின்றி, ஜப்பான் அரசும் எச்சரிக்கை விடுத்து, மக்களின் இடங்களை காலி செய்து, பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தியது. இதுமட்டுமின்றி பல இடங்களில் பதுங்கி இருப்பதற்காக தங்குமிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

ஜே-அலர்ட்:

பல இடங்களில் ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டதால், ஜப்பான் அதிகாரிகள் வடகிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் கட்டிடங்களை காலி செய்ய 'ஜே-அலர்ட்' விடுத்துள்ளனர். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற 'அலர்ட்' விடுக்கப்படுவது இதுவே முதல்முறை. ஜப்பானின் ஹொக்கைடோ மற்றும் அமோரி பகுதிகளில் ரயில் சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. எனினும் தற்போது அது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் கண்டனம்:

அதே சமயம் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”வடகொரியா சமீபத்தில் நடத்திய சோதனைகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன். தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் நிலைமை குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். 

ஏவுகணையினால் சேதாரம்:

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பிறகு சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை என்று ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் ஹிரோகாசு மட்சுனோ.

பசிபிக் பெருங்கடலில்:

வடகொரியா அப்பகுதியில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளை குறிவைத்து ஆயுத சோதனையை தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியா வீசிய ஏவுகணை ஒன்று ஜப்பானைக் கடக்கும் போது பசிபிக் பெருங்கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜப்பான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com