நோபல் பரிசு பெற்ற மலாலா திருமண பந்தத்தில் இணைந்தார்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா, இங்கிலாந்தில் அசீர் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நோபல் பரிசு பெற்ற மலாலா திருமண பந்தத்தில் இணைந்தார்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா, இங்கிலாந்தில் அசீர் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியில் உள்ள வீட்டில் எளிய முறையில் மலாலாவின் திருமணம் நடந்தேறியுள்ளது.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மலாலா, இன்றைய தினம் தனது வாழ்நாளில் ஒரு பொன்னான நாள் என குறிப்பிட்டுள்ளார். உங்களின் பிரார்த்தனைகளை எங்களுக்கு அனுப்பங்கள் எனவும் முன்னோக்கி செல்லும் பயணத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக நடப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் பதிவிட்டுள்ளார்.