இனி அமெரிக்காவிற்கு ஈஸியா போகலாம்…

இனி அமெரிக்காவிற்கு ஈஸியா போகலாம்…

அமெரிக்கா செல்ல இந்தியார்களுக்கான பயண தடையை அந்நாடு தளர்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை பரவல் தீவிரமாக இருந்ததால் பலவேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அதே நேரத்தில் அமெரிக்க உட்பட சில நாடுகள் இந்தியாவிலிருந்து பயணம் செய்வோருக்கு பயண ஆலோசனைகளையும் வெளியிட்டன. அதன்படி இந்தியாவில் இருந்து வரும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களை தவிர மற்ற அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பயண ஆலோசனையை எளிதாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.