ஆப்கானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரம்... 168 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்...

காபூல் விமான நிலையத்தில் 150 இந்தியர்களை தலிபான்கள் கடத்தியதாக செய்தி வந்த நிலையில், அவர்களை மீட்கும் பணியில் இந்தியா துரிதமாக செயல்பட்டு வருகிறது.

ஆப்கானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரம்... 168 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்துள்ள நிலையில் ஆட்சியமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காபூலில் வசிக்கும் வெளிநாட்டு மக்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். அதேவேளையில் உள்நாட்டு மக்களும் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். 

இதனால் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் இருந்து 150 இந்தியர்களை தலிபான்கள் கடத்தி வைத்துள்ளதாக செய்திகள் வந்தன. இதனால் இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. விமானம் குஜராத் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கிய பின்னர், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.