சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்...

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்...

பில் கிளிண்டனுக்கு கொரோனா இல்லாமல் வேறொரு வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவா் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 வயதான அவருடன் அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் இருந்தார். பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, அவரது மனைவி ஹிலாரி நன்றாக கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பில் கிளிண்டன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது பில் கிளிண்டன் பூரண நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைகள் அவருக்கு தொடர்ந்து வழங்கப்படும் எனவும், அவரது செய்தி தொடா்பாளா் ஏஞ்சல் உரேனா தெரிவித்துள்ளார்.